செய்தி விளையாட்டு

WTC Final – வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.

3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!