இறுதிப் போட்டியில் பங்கேற்கும் மல்யுத்த வீரர் ஜோன் சீனா (John Cena) !
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இரசிகர்களால் மல்யுத்த ஜாம்பவான் என்று போற்றப்படும் அமெரிக்க மல்யுத்த சாம்பியன் ஜான் சீனா (John Cena) , இன்று (13) தனது இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இந்தப் போட்டி அமெரிக்க நேரப்படி நாளை (14) காலை நடைபெறும். அதன்படி, ஜான் சீனாவின் 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வாழ்க்கை இந்த போட்டியுடன் முடிவடையவுள்ளது.
இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ‘GUNTHER’ ஐ எதிர்கொள்ளவுள்ளார்.
ஜான் சீனா, 2001 முதல் WWE மல்யுத்த வளையத்தில் உள்ளார். அவர் 17 முறை WWE சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இது ஒரு வீரர் வென்ற அதிக பட்டங்கள் ஆகும்.





