செய்தி விளையாட்டு

Womens WC – 326 ஓட்டங்கள் குவித்த பிரபல ஆஸ்திரேலிய அணி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் போட்டியில் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

தொடக்க வீரர்கள் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். அவர்களை தொடர்ந்து 6ம் இடித்தில் களமிறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் சதமடித்து அசத்தினார். அவர் 83 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 115 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி