நியூசிலாந்தில் 2 வயது குழந்தையை பெட்டிக்குள் வைத்து பயணம் செய்த பெண்ணால் அதிர்ச்சி
 
																																		நியூசிலாந்தில் 2 வயதுச் குழந்தையை ஒரு பயணப் பெட்டிக்குள் அடைத்து வைத்து பேருந்தில் பயணம் செய்த 27 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் வைத்திருந்த பயணப் பெட்டி தொடர்ந்து நகர்வதை பேருந்து ஓட்டுநர் கவனித்தார். சந்தேகமடைந்த ஓட்டுநர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் குழந்தை இருந்தது தெரியவந்தது.
அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு உடனே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பேறுபட்ட காயங்கள் இல்லை எனத் தெரிந்தது. தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண்ணின் மீது சிறுமியை துன்புறுத்தியதற்கும் அலட்சியமாக கையாள்ந்ததற்குமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குற்றச்சாட்டுகள் எழுக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நியூசிலந்தின் சிறார்நல அமைச்சுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
        



 
                         
                            
