சிங்கப்பூரில் குழந்தைக்காக பொய்யுரைத்த பெண்ணுக்கு சிறை!
சிங்கப்பூரில் 42 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளை ஒரு பிரபலமான தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதற்காக பொய் உரைத்த குற்றச்சாட்டில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
தனது விலாசத்தை அவர் மாற்றி கூறியமைக்காகவே அவர் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் நீதிபதியிடம் தனக்கு மீண்டுமொரு வாய்ப்பை வழங்குமாறு கோரியுள்ளார். தன்னாள் சிறைக்கு செல்ல முடியாது எனவும் தனது மகளுக்கு தன்னுடைய உதவி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண் செப்டம்பர் மாதம் பொது ஊழியர்களுக்கு தவறான தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
தனது கணவர் மற்றும், எட்டு வயதுடைய மகளுடன் வசித்து வந்த பெண் தனது பிளாட்டை இரண்டு வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதனால் வேறு ஒரு இடத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது குழந்தையை பாடசாலைக்கு சேர்ப்பதற்கு தான் வசிக்கும் விலாசத்திற்கு பதிலாக வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் விலாசத்தை வழங்கியுள்ளார். பின்னர் குறித்த பெண் தனது விலாசத்தை கணவரின் விலாசத்திற்கு மாற்றவுள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பாடசாலை ஊழியர்கள் அதன் விதிக்கு ஏற்ப கணவரின் விலாசம் பாடசாலையில் இருந்து தூரமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டி வேறு பாடசாலைக்கு மாற்ற பரிந்துரைத்திருந்தனர்.
இந்நிலையில் மீளவும் தான் முன்னர் குறிப்பிட்ட வாடகைக்கு வீட்டில் வசிப்பதாக அந்த பெண் கூறிய நிலையில், பாடசாலை ஊழியர்கள் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு வாடகைதாரர்கள் மாத்திரமே இருந்த நிலையில் அந்த பெண் பொய் உரைத்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





