இந்தியாவில் மாட்டுபால் குடித்த பெண் உயிரிழப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மாட்டுப்பால் குடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரெபிஸ் நோயாள் பாதிக்கப்பட்ட மாட்டிடம் இருந்து கரக்கப்பட்ட பாலை அருந்திய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு அரிய நிகழ்வாகும், இது அவரது சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகள், ஒரு தெரு நாய் பசுவைக் கடித்ததால், குறித்த விலங்கு நோய்வாய்பட்டதாக தெரியவருகிறது. பசுவும் நோயின் அறிகுறிகளைக் காட்டியது மற்றும் நோய்த்தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
இருப்பினும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. குறித்த பெண் பல மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்திய சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.