அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை ‘கோழைகள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி” என்றும் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள்.
ஆனால், அந்த அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை.
மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. கோழைகள், நாங்கள் இதை நினைவில் கொள்வோம்!” என நேட்டோ உறுப்பு நாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.





