பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார்களின் பட பூஜை! நயன்தாரா இலங்கை வராதது ஏன்?

மலையாளத்தின் முன்னணி ஹீரோக்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருமே அடுத்தடுத்து தங்களது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றனர். அவர் ஆக்ஷன் திரில்லரில் நடித்தால் இவர் சைக்காலஜிகல் திரில்லரில் நடிக்கிறார்.
ஆரோக்கியமான போட்டி இவர்களிடையேயும் இவர்களை கொண்டாடும் ரசிகர்களிடையேயும் காணப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதியபடத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இந்தப் படத்தின் பூஜை தற்போது இலங்கையில் போடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மம்முட்டி -மோகன்லால் மட்டுமில்லாமல் பகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த பூஜையில் மோகன்லால் பங்கேற்று குத்துவிளக்கேற்றி படத்தை துவங்கி வைத்துள்ளார். இதனிடையே படத்தின் பூஜையில் நடிகர் மம்முட்டி தாமதமாக கலந்துகொண்டார்.
எனினும் நயன்தாரா பங்கேற்கவில்லை. மலையாள சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கவுள்ளார். மேலும் சிஆர் சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் இலங்கையில் துவங்கியுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி மற்றும் கொச்சி ஆகிய இடங்களிலும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடக்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
தொடர்ந்து படத்தின் சூட்டிங் 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் நாராயணனே எழுதியுள்ள நிலையில், பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா பொதுவாக படங்களில் பூஜைகளிலும், ஆடியோ லாஞ்ச்களிலும், வெற்றி விழாவிலும் கலந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று உள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இந்த படத்தின் பூஜைக்கும் அவர் வரவில்லை என்பது இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

(Visited 43 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்