WhatsAppஇல் இனி ஒரே நேரத்தில் 32 பேருக்கும் அதிகமானோர் பேச முடியும்
வாட்ஸ்அப்பில் 32 நபருக்கும் அதிகமானோர் பேசும் வகையில் ஆடியோ சேட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்திய பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு புதுமைகளை இணைத்து வருகிறது. பயனாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு கூடுதல் அம்சங்கள் தொடர்ச்சியாக அப்டேட்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாட்ஸ்அப் தனது பயனாளர்களின் வசதிக்கேற்ப தற்போது ஆடியோ சாட்டை செழுமைப்படுத்தி இருக்கிறது. அதாவது ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்களோடு நேரடியாக ஆடியோ சாட் செய்ய முடியும்.
இந்த அழைப்புக்கு ரிங்டோன் வராது, மாறாக புஸ் நோட்டிபிகேஷன் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும். இதைத்தொடர்ந்து நேரடி ஆடியோ சாட்டில் இணைந்து கொள்ள முடியும். இதன் வழியாக குறுஞ்செய்தியும் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கு குழுவில் 33 பேர் முதல் 128 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும். இதன் மூலம் சிறியளவிலான ஆலோசனைக் கூட்டங்களை கூட நடத்த முடியும்.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது நேரடியாக அழைப்பில் பேசுவது போன்ற சேவையை தரும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் வாட்ஸ்அப் சேட்டுகளின் பிரைவசியை பாதுகாக்க சேட்டுகளை லாக் செய்யும் சீக்ரெட் கோட் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சேட்களை பாஸ்வோர்ட் அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கு பாஸ்வேர்டுகளாக எண்களையோ அல்லது எமோஜிக்களையோ பயன்படுத்த முடியும்.