பிரான்ஸில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்! நெருக்கடியில் அதிகாரிகள்
பிரான்ஸில் கடந்த சில மாதங்களாக சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையிலேயே சிறைச்சாலைகளில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நவம்பர் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, பிரான்சில் 75,130 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மொத்தமாக 61,000 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில், மேலதிகமாக 14,000 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஒக்டோபரில் 74,342 கைதிகளும், ஒருவருடத்துக்கு முன்னர் 72,809 கைதிகளும் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
கொவிட் 19 காலத்தின் போது சிறைக்கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.