ட்ரம்பின் நிலைப்பாடுதான் என்ன? : ரூபியோவிடம் கேள்வி எழுப்பும் ஐரோப்பிய தலைவர்கள்!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவும், டிரம்ப் நிர்வாகத்தின் நேட்டோவிற்கான புதிய தூதரும் இன்று (03.04) பிரஸல்ஸிற்கு வருகை தந்துள்ளனர்.
அங்கு கூட்டணியின் உயர்மட்ட இராஜதந்திரிகள் ஐரோப்பாவில் அமெரிக்க பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், நேட்டோவை அச்சுறுத்தலாகக் கருதும் ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுடன் நெருங்கிச் செல்ல ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பது குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளும் கனடாவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.
இதற்கிடையில் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமுல்படுத்தியுள்ளார். இது சர்வதேச அரங்கில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் மார்கோ ரூபியோவிடம் ட்ரம்பின் நிலைபாடு குறித்து ஐரோப்பிய தலைவர்கள் கேட்டறிய முற்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.