கிரீன்லாந்தில் என்ன இருக்கிறது?
பூமியின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு வளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமான மூலப்பொருட்களும் அடங்கும்.
லித்தியம் மற்றும் அரிய பூமி கூறுகள் (REEs) போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் உட்பட, குறிப்பிடத்தக்க ஹைட்ரோகார்பனையும் (hydrocarbon) கொண்டுள்ளது.
இந்த வளங்கள் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய ஆற்றல் மாற்றத்திற்கு மிக முக்கியமானவை.
கிரீன்லாந்தின் ஹைட்ரோகார்பன் ஆற்றல் மற்றும் கனிம வளத்தின் அளவு, குறித்து டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விரிவான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளன.
இதேவேளை இங்கிலாந்தின் அளவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிய தீவான கிரீன்லாந்தில், இன்னும் ஆராயப்படாத மிகப் பெரிய பகுதியில் அரிய கனியவளங்கள் பனிக்கட்டிக்கு கீழ் மறைந்திருக்கலாம் என நம்பப்படுவதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற முனைப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





