பொழுதுபோக்கு

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்… சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார் தெரியுமா?

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி பட குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கூலி படத்தி பார்ட்டி சாங் ஒன்று வெளியானது இதில் ரஜினி நடித்து இளையராஜா இசையமைத்த தங்க மகன் படத்தில் இருந்து வா வா பக்கம் வா படத்தின் இசை உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பாடலின் முழு காப்புரிமை தன்னிடம் இருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தன்னுடைய பாட்டை மறு உருவாக்கம் செய்வதற்கு கூட உரிய அனுமதி பெற வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் வேட்டையன் படபிடிப்பு முடிந்து ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் இளையராஜா சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ரஜினி அது இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையேயான பிரச்சனை என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்