மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

கண்டி – மகாவலி கங்கையில் நீடாச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மற்றொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் ஆவர்.
காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
(Visited 11 times, 1 visits today)