ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட வேல்ஸ் முதலமைச்சர்

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை [Keir Starmer] ஆதரிப்பதாக வேல்ஸ் முதல் அமைச்சர் எலுனெட் மோர்கன் [Eluned Morgan] தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வேல்ஸின் நலனை மையமாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வேல்ஸில் நிலைத்தன்மை, பொருளாதாரம், உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் மக்கள் நலனுக்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவசியம் என்றும்
அவர் கூறியுள்ளார்.

அரசியல் தலைமை என்பது தரநிலைகளை நிலைநிறுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு என்றும்
வேல்ஸின் மக்களுக்கு உண்மையான மாற்றம் மற்றும் நன்மை வழங்குவதே முதன்மையானது என்றும் குறிப்பிட்டார்.

ஸ்காட்லாந்தில் எதிர்கட்சியினர் சிக்கல்களை உருவாக்கும் நிலையில், மோர்கன் தனது நிலையை தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!