வாராந்திர இலக்கு வைத்து ஒரு மில்லியன் பவுண்டுகள் கொள்ளை! லண்டனில் சம்பவம்!
லண்டனில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைத் திருடிய பல்கேரியக் கும்பல் தற்போது பிடிபட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஹார்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும் லண்டன் பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளே இவர்களது இலக்கு.
இவர்கள் ஒரு நிறுவனத்தைப் போலச் செயல்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் இவ்வளவு தங்கம் திருட வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே இலக்கு (Weekly Gold Targets) நிர்ணயித்து, திட்டமிட்டு இந்தக் கொள்ளைகளை அரங்கேற்றியுள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை உருக்கி, அவற்றைச் சட்டவிரோதமாகப் பணமாக மாற்றியுள்ளனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான தடயங்கள் மூலம் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு நீதிமன்றம் மொத்தம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.





