பொழுதுபோக்கு

திருமணம் என்ற பெயரில் பல லட்சங்களை ஏமாற்றிய சீரியல் நடிகை… பரபரப்பு புகார்

தமிழ் சின்னத்திரையில் ஒரு சீரியல் பல வருடங்களாக ஓடுகிறது என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது என அர்த்தம்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பான ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியலின் 2ம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரில், சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்கிற தொழிலதிபர், ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவர் உடன் திருமணம் நடந்திருக்கிறது.

ஆனால் அவரை விவாகரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து கொண்டது தனக்கு பின்னர் தான் தெரியவந்தது.

ரிஹானாவுக்கு ரூ.9 லட்சமும், அதன்பின்னர் சிறுக சிறுக 9.5 லட்சமும் பணம் ஆன்லைன் மூலம் கொடுத்திருக்கிறேன்.

சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால், பலருடன் பழக வேண்டும், இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் என அந்த புகாரில் ராஜ் கண்ணப்பன் கூறியிருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் நடிகை ரிஹானா, அவரது தாயார் மற்றும் அவரது முன்னாள் கணவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!