நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதி அடர் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை ஏற்றி மெதுவாக வாகனத்தை செலுத்துமாறும் நுவரெலியா காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)