இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோய் தொற்றின் பாதிப்பு தீவிரமாக அச்சுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 22,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது .
மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 8071 ஆகும்.
மேலும், வடக்கு மாகாணத்தில் 4375 பேரும், மத்திய மாகாணத்தில் 1890 பேரும், வடமேற்கு மாகாணத்தில் 1616 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 1855 பேரும், தென் மாகாணத்தில் 1723 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
(Visited 11 times, 1 visits today)





