இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண் சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பகுதியிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)





