இலங்கை மக்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் போல் நடித்து வியாபாரிகளிடம் பணம் வசூலிப்பவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
வர்த்தகர்களை அழைத்து அதன் உறுப்பினர்களின் பெயரில் பணம் வசூலிக்கும் மோசடி தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)