மிரள வைக்கும் வார் 2 டிரெய்லர் – கூலியின் நிலை என்னவாகுமோ?

ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நட்சத்திரம் ஹிரித்திக் ரோஷன் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் படம் ‘வார் 2’.
YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகி உள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டின் பெரிய பான் இந்தியா படங்களில் ஒன்றான இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அதிரடி காட்சிகள் நிறைந்த டிரெய்லர், பின்னணியில் ஜூனியர் என்.டி.ஆர், ஹிரித்திக் ரோஷனின் குரல், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
டிரெய்லரில் உள்ள வசனங்கள் என்.டி.ஆர், ஹிரித்திக் இடையேயான வார்த்தைப் போராகத் தெரிகிறது. இருவரும் மோதிக் கொள்ளும் அதிரடி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே கூலி படத்தோடு வார் – 2 மோதும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரு படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. கூலிக்கான ட்ரெய்லர் வெளியாகாத நிலையில், தற்போது வார் – 2 ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.
கூலியின் வசூலுக்கு வேட்டுவைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.