போர் அபத்தமாக தோன்றுகிறது – மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ்

உலகில் இடம்பெறும் போர் அபத்தமாக தோன்றுகிறது என்று வாட்டிகன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அமைதி கோரி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உக்ரைன், லெபனான், மியான்மர், சூடான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் நிலவும் போர் வன்முறைகளை பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
தமது உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்யும் அன்பர்கள் அனைவரும் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி அந்த அறிக்கையில் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் உயிருடன் போராடி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருந்து பார்க்கும் போது போர் மிகவும் அபத்தமாக தெரிவதாக போப் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)