அமெரிக்காவிற்கு எதிராக இத்தாலியில் போர்கொடி! 10000 போராட்டக்காரர்கள் களத்தில்!
இத்தாலியின் மிலன் நகரில் நேற்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கத்திற்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஐஸ் முகவர்களின் இருப்புக்கு எதிராக 10000 பேர் ஒன்றுக்கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் துரதிஷ்டவசமான நிலையை கொண்டுவந்துள்ளது.
விளையாட்டுகளிலிருந்து வெளியேறு, இனப்படுகொலை நாடுகள், பாசிச காவல்துறை மற்றும் மாசுபடுத்தும் ஸ்பான்சர்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




