தமிழ்நாட்டில் காத்து வாங்கும் வார் 2…

பான் இந்தியா படங்களாக வெளியாகி வெற்றி பெரும் படங்கள் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக சென்று சேர்வது மட்டும் இல்லாமல், வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை எட்டுகிறது.
பான் இந்தியா படங்களாக வெளியாகும் படங்கள் மட்டும் சரியாக கிளிக் ஆகிவிட்டால், கன்ஃபார்ம் ஆயிரம் கோடிகள் வசூல் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இப்படி இருக்கும்போது, இன்று பான் இந்தியா அளவில் இரண்டு படங்களாக ரஜினிகாந்தின் கூலி, ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள், படங்களின் புரோமோஷன்கள், படங்களின் அட்வான்ஸ் புக்கிங் செய்திகள் என இணையம் முழுவதும் கூலி – வார் 2 படங்களின் மோதல்கள் தான்.
இப்படி இருக்கும்போது இரண்டு படங்களும் முதல் நாளில் எந்த அளவுக்கு வசூல் குவிக்கும் என்ற பேச்சுகள் மிகவும் பயங்கரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பாக்ஸ் ஆபீஸ் கணக்குப்படி, கூலி படம் தான் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் குவித்துள்ளது என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியிலும் கூலி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் வார் 2 படத்திற்கு அவ்வாறாக இல்லை. வார் 2 படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கிடைத்த தியேட்டர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவுதான்.
அப்படி தியேட்டர்கள் கிடைத்த இடங்களிலும் மாலை மற்றும் இரவு காட்சியாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒதுக்கப்பட்ட காட்சிகளுக்கும் பெரிய அளவில் புக்கிங் இன்னும் அமையவில்லை.
பல தியேட்டர்களின் புக்கிங் ஸ்டேட்டஸ் எடுத்துப் பார்த்தால் வார் 2 படத்திற்கு காத்து வாங்கிக் கொண்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல தியேட்டர்களில் இன்னும் ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை.
இதை இணையத்தில் பார்க்க முடிகிறது. இது மட்டும் இல்லாமல் இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் என்னங்க தமிழ்நாட்டில் வார் 2 படத்திற்கு ரிலீஸ்க்கு முன்னாடியே காத்து மேல காத்து கீழ வாங்கிட்டு இருக்கு என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.