ரொக்கெட் ஏவுதலை அருகில் இருந்து பார்க்க விரும்பமா? – கென்னடி விண்வெளி மையம் வழங்கும் வாய்ப்பு!
அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையம், ஆர்ட்டெமிஸ் II விண்வெளி பயணத்தை பொதுமக்கள் நெருக்கமாகப் பார்ப்பதற்காக பல சிறப்பு தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, “ஃபீல் தி ஹீட்” (“Feel the Heat) மற்றும் “மெயின் விசிட்டர் காம்ப்ளக்ஸ்” (Main Visitor Complex) என இரண்டு தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் “ஃபீல் தி ஹீட்” (Feel the Heat) எனப்படும் சிறப்பு டிக்கெட் தொகுப்பு ஏற்கனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பு மூலம், ரொக்கெட் ஏவுதலை மிக அருகில் இருந்து பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்பல்லோ/சனி V மையத்திலிருந்து ஆர்ட்டெமிஸ் II விண்வெளி பயணத்தைப் பார்க்க உங்களை அனுமதிக்கும் இந்த தொகுப்பின் கீழ், ரொக்கெட் ஏவுதளத்திலிருந்து 3.5 மைல் தொலைவில் இருந்து தொடர்புடைய காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.kennedyspacecenter.com/event/nasa-space-launch-system-sls-artemis-ii/





