வாக்னர் குழுவின் கலகத்திற்குப் பிறகு புடினை சந்தித்த பிரிகோஜின்?
வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் கலகத்திற்குப் பிறகு ரஷ்யாவின் விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார்.
கடந்த மாதம் ஏற்பட்ட வாக்னர் குழுவின் கலகத்திற்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினை சந்தித்தார் என்று கிரெம்ளின் கூறுகிறது.
மாஸ்கோவில் நடந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 35 வாக்னர் கமாண்டர்களில் கூலிப்படையின் தலைவரான பிரிகோஜினும் ஒருவர் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேலும் ஹெரிவித்த்துள்ளார்.
உக்ரைன் போர் முயற்சி மற்றும் கலகம் குறித்து ஜனாதிபதி புடின் “மதிப்பீடு” செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஜூன் 23 அன்று தொடங்கப்பட்ட கிளர்ச்சி 24 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் கீழ், ப்ரிகோஜின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன, மேலும் அவர் பெலாரஸுக்கு செல்ல முன்வந்தார்.
போரை நடத்துவது தொடர்பாக வாக்னர் குழுவினருக்கும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே மிகவும் பகிரங்கமாக உட்கட்சி மோதல்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.