உலகம்

ஜப்பானில் திடீர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நிறைவு – ஆளும் கட்சி வெற்றிப்பெற வாய்ப்பு!

ஜப்பானில் பிரதமர் சானே தகைச்சி அழைப்பு விடுத்திருந்த திடீர்த் தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.

தகைச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) ஒரு தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முதல் பெண் பிரதமரான தகைச்சி கட்சித் தலைவராக ஆன நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த திடீர் தேர்தலை அறிவித்தார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்துள்ளது. அத்துடன் கோமைட்டோ கட்சியுடனான கூட்டணியும் சரிந்துள்ளது.

இதனால் பெரும்பாலானவர்கள் இந்த தேர்தலை சூதாட்டம் என்றே அழைக்கிறார்கள். NHK ஒளிபரப்பாளரின் கருத்துக் கணிப்பின்படி, LDP போட்டியில் 328 இடங்களில் 274 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!