700,000 ஆண்டுகளுக்கு பின் உயிர்ப்புடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை வெளியிட்ட எரிமலை!

ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டஃப்தான் எரிமலை (Taftan volcano) தற்போது உயிர்ப்புடன் இருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 700,000 ஆண்டுகளாக குறித்த எரிமலை செயலற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜியோபிசிகல் (Geophysical) ரிசர்ச் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஜூலை 2023 மற்றும் மே 2024 க்கு இடையில் எரிமலையின் உயரம் 3.5 அங்குலம் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அதன் மேற்பரப்பிற்கு அடியில் குறிப்பிடத்தக்க வாயு அழுத்தம் அதிகரிப்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த எரிமலையானது தற்போது வெடிப்பதற்கு சாத்தியமான அறிகுறிகள் அவதானிக்கப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)