பொழுதுபோக்கு

வெளியேறிய தர்ஷிகா…. விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சுமார் 70 நாட்களை கடந்து விட்டது . 100 நாட்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த போட்டி முடிவுக்கு வர இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கடந்த இரண்டு வாரமாக டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.

இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான சத்யா வெளியேறினார். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சேப் கேம் விளையாடியதாகவே பார்க்கப்பட்டது. முதல் நாளே சத்யா வெளியேறிய நிலையில், ஞாயிற்று கிழமை அன்று விஷால் மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவது கன்ஃபாம் ஆன நிலையில், பிக்பாஸ் ஹவுஸ் மேட்சே தர்ஷிகா கடந்த சில வாரங்களாக காணாமல் போய் விட்டார் அவர் எங்கே என்று தேடும் நிலை தான் இருந்தது.

எனவே அவர் தான் வெளியேற உள்ளதாக தெரிவித்தனர். இறுதியாக தர்ஷிகா வெளியே அனுப்பட்ட நிலையில், விஷால் நூல் இழையில் தப்பினார்.

தர்ஷிகா என்ன தான் விஷாலை காதலிப்பதாக கூறி, லவ் கன்டென்ட் கொடுத்தாலும் அது பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இதற்க்கு காரணம் தர்ஷிகா உருகி உருகி காதலித்தாலும், விஷால் அதனை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் டயலாமோ மைட் செட்டில் தான் இருந்தார். எனவே மக்களே நீங்க காதல் கன்டென்ட் கொடுத்தது போதும் என கூறி அனுப்பி வைத்து விட்டதாகவே பார்க்கப்பட்டது.

விஷால் இந்த வாரம், பழைய ஃபாமுக்கு வரவில்லை என்றால் அவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது விஷாலை கட்டி அணைத்து உருகிய தர்ஷிகா, அவருக்கு காதல் பரிசாக தன்னுடைய அம்மாவின் மோதிரத்தை கொடுத்து விட்டு வந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உருகி உருகி காதலிக்கும் இந்த ஜோடி… வெளியே சென்ற பின்னரும் இதே போல் காதலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் விஜய் சேதுபதியிடம் வெளியே வந்து பேசிய தர்ஷிகாவுக்கு அவருடைய பிக்பாஸ் பயணம் குறித்த வீடியோ போட்டு காண்பிக்கும் போது அவர் அதிகமாக விஷாலுடன் இருக்கும் காட்சிகள் தான் இடம் பெற்றது.

இதை பார்த்து வெட்கப்பட்டு சிரித்த தர்ஷிகாவிடம் விஜய் சேதுபதி, இப்போது நீங்கள் எங்கு சறுக்கினீர்கள் என தெரிகிறதா என கேட்டு அவருக்கு புரியும் படி சில வார்த்தைகளை கூறி வெளியே அனுப்பினார்.

(Visited 78 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!