பொழுதுபோக்கு

ரெட் கார்டு வாங்கிய விஜே பார்வதி – வைரல் வீடியோவின் உண்மை என்ன?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 90 நாட்கள் வரை டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இறுதிச்சுற்றுக்குச் செல்லும் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சான்ட்ராவுக்கும், விஜே பார்வதி மற்றும் கம்ருதீனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பார்வதி, அருகில் இருந்த சான்ட்ராவை எட்டி உதைத்தார். இதற்கு கம்ருதீனும் உடந்தையாக இருந்தார்.

இந்தத் தாக்குதலால் சான்ட்ராவுக்கு ‘பனிக் அட்டாக்’ (Panic Attack) ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. இந்தச் செயலால் அதிருப்தியடைந்த பிக்பாஸ் மற்றும் மக்கள் முகம் சுளித்தனர்.

வார இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் வன்முறைச் செயலைக் கண்டித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். 90 நாட்கள் சிறப்பாக விளையாடிய இருவரும், ஒரே ஒரு நொடி ஆத்திரத்தால் அவமானத்துடன் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.

வெளியே வந்த பிறகு விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துப் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பார்வதி கூறியிருப்பதாவது:

“ரியாலிட்டி ஷோக்களில் ஜனநாயகம் இல்லை. யார் ஜெயிக்க வேண்டும் என்பதை ஒரு சிலர் முடிவு செய்கிறார்கள். எனக்கு காமெடி செய்துகொண்டு இருக்கத் தெரியாது, உண்மையைத்தான் பேசத் தெரியும். அதனால் தான் இங்கெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.”
என்று கூறும் வீடியோ இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த வீடியோவின் பின்னணியை ஆராய்ந்தபோது ஒரு உண்மை தெரியவந்துள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. அவர் முன்பு கலந்துகொண்ட ‘சர்வைவர்’ (Survivor) நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது பேசிய பழைய வீடியோவாகும்.

இதைப் பார்த்த ரசிகர்கள், “ரியாலிட்டி ஷோவே செட் ஆகவில்லை என்று சொல்லும் பார்வதி, பிறகு ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார்?” என்று சமூக வலைதளங்களில் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

AJ

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!