பொழுதுபோக்கு

மொத்தமாக தூக்கி எறியப்பட்ட நடிகர் – இப்ப என்ன செய்றார் தெரியுமா?

பல திறமையான நடிகர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை விஜய் டிவியை சேரும். சிவகார்த்திகேயன் முதல் சந்தானம், ஐஸ்வர்யா ராஜேஷ் என சினிமாவில் வளர்ந்த பல நடிகர்கள் எல்லாம் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்பு குறையும் பொழுது விஜய் டிவி அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

அப்படி சமீபத்தில் விஜய் டிவியில் இருக்கும்போது செல்ல பிள்ளையாக வளம் வந்த நடிகருக்கு இப்போது சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் விஜய் டிவி அவரை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. பல சூப்பர் ஹிட் ப்ரோக்ராம்களை விஜய் டிவிக்கு கொடுத்த அவர் இப்பொழுது தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

50 படத்திற்கு மேல் சினிமாவில் நடித்தும் இதுவரை தனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வருகிறார் விஜய் டிவி புகழ் நடிகர் ஒருவர்.

தனுஷ் சிவகார்த்திகேயன், சிம்பு என இளம் நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தாலும் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

சின்னத்திரையில் 4 பெரிய ப்ரோக்ராம்களை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஜெகன் . விஜய் டிவியில் “கனெக்ட்” என்ற ப்ரோக்ராமை தொகுத்து வழங்கி நல்ல வரவேற்பை பெற்று வந்தார். இது விஜய் டிவியில் சக்ஸஸ்புல்லா ஓடியது. அதன்பின் ஜெகன் விஜய் தொலைக்காட்சிக்கு “எஸ் ஆர் நோ” என்ற ப்ரோக்ராமை தொகுத்து வழங்கினார். அது சரியாக போகவில்லை .

இதனால் விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டவர். அதன் பின் ஜி தொலைக்காட்சியில் “ரன் பேபி ரன்” போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கலைஞர் டிவியில் “இங்க என்ன சொல்லுது” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும். இப்பொழுது இவர் சின்ன திரையில் இல்லை.

சினிமாவிலும் வளர முடியாமல், மீண்டும் சின்னத்திரையில் நுழைய முடியாமல் கஷ்டப்படுகிறார் ஜெகன்.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்