விஷால் – அபிநயா காதல்? 15 வருட உறவு குறித்து அபிநயா ஓபன்
விஷால் நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த சுந்தர் சியின் மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தான தற்போது 47 வயதாகும் விஷால் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து அவர்களது திருமணம் ரத்தானது. இதைத் தொடர்ந்து விஷால் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இப்போது விஷாலும் நடிகை அபிநயாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான டைம் டிராவல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார். இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதால் தான் மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவிற்கு வாய்ப்பும் கிடைத்ததாக சொல்லப்பட்டது.
காதல் வதந்தி குறித்து நடிகை அபிநயா தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைபருவ நண்பருடன் உறவில் இருப்பதாகவும், இருவரும் ஒருவரையொரு காதலித்து வருவதாக கூறிய அவர், இனிமேல் இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி விஷால் உடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், 15 ஆண்டுகாலமாக உறவில் இருக்கும் அந்த காதலன்பற்றி அபிநயா எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் நடிகரா இல்லை வேறொருவரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.