பருவநிலை மாற்றத்தால் உயிர் பெறும் வைரஸ்கள் : பனிக் கரடிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
30 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பருவநிலை மாற்றம் காரணமாக துருவ கரடிகள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
உயரும் வெப்பநிலைகள் அவற்றின் வாழ்விடத்தை உருக்குவதால் அவற்றில் இருந்து வெளிவரும் வைரஸ்கள் விலங்குகளை பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள சுச்சி கடலில் கரடிகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வின் வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் கேரின் ரோட் கூறுகையில், கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிவது கடினம், ஆனால் ஆர்க்டிக் சுற்றுச்சூழலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை இது காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.
துருவ கரடிகளில் மிகவும் பொதுவான நோயை உண்டாக்கும் முகவர்கள் என அழைக்கப்படும் ஐந்து நோய்க்கிருமிகள், டாக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் நியோஸ்போரோசிஸை ஏற்படுத்தும் இரண்டு ஒட்டுண்ணிகள், முயல் காய்ச்சல் மற்றும் புருசெல்லோசிஸ் ஆகியவற்றை ஏற்படுத்தும் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.