ChatGPT உதவியால் 150,000 டொலர் லாட்டரியை வென்ற வர்ஜீனியா பெண்
ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு உரையாடி செயலி மூலமாக தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இளம்பெண் ஒருவர் ChatGPT செயலியை பயன்படுத்தி லாட்டரி அடித்தது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து ChatGPT-யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என பரிந்துரைக்க கேட்டுள்ளார்.
அது கொடுத்த தகவலின்படி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் வென்ற பணத்தை அனைத்தும் தனது இறந்த கணவரின் பெயரில் நன்கொடையாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
ChatGPT உதவியால் லாட்டரி வென்ற கேரி தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





