சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்!
சந்திரயான் -3 நிலவை நெருங்கிய நிலையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இந்தியாவின் சந்திர பயணத்தின் இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஆகஸ்ட் 17 வியாழன் அன்று மதியம் 1 மணிக்கு நடந்தது
இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும்.
விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நெருக்க உள்ளது. லேண்டர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்பிறகு லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் திக திகதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்க இருக்கிறது.
(Visited 4 times, 1 visits today)