பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் திட்டம் என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் எனவும் விஜய் கூறி இருந்தார். அவரின் இந்த முடிவு கோலிவுட்டுக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் விஜய் நடித்த காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக படமாக்கப்பட்டு விட்டன.

ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்த பின்னர் அரசியல் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சைலண்டாகவே இருக்கிறார் தளபதி விஜய்.

இதனால் விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ் என்ன என்பது பற்றி கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதுபற்றிய ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது.

அதன்படி நடிகர் விஜய், வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாராம். முதற்கட்டமாக 100 இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம்.

முதல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து நடிகர் விஜய் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்களாம்.

தற்போது தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content