பொழுதுபோக்கு

“உனக்கு அங்க என்ன வேலை” த்ரிஷாவை லெஃப்ட் ரைட் வாங்கிய ஷோபா

நடிகை திரிஷா செய்த செயலுக்காக, விஜய்யின் தாயார் ஷோபா, அவரை கடுமையாக திட்டியதாக பயில்வான் ரங்கநாதன் அண்மையில் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதியின் திரையுலக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை என இரண்டும் படு பிசியாக போய்க்கொண்டிருந்தாலும், பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக தன்னுடைய மனைவி சங்கீதாவிடம் இருந்து விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் நடிகை திரிஷாவுடன், தளபதிக்கு உள்ள நெருக்கம் என சில தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே திரிஷாவுடன் நடிக்க கூடாது என சங்கீதா போட்ட கண்டிஷனால் தான், தளபதி பல வருடமாக திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்காமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சங்கீதாவுடன் ஏற்கனவே சில கருத்து வேறுபாடு இருந்த சமயத்தில், அவர் போட்ட கண்டீஷனை மீறும் விதமாக ‘லியோ’ படத்தில் நடித்தது மட்டும் இன்றி, லிப் லாக் காட்சியிலும் நடித்திருந்தார்.

விஜய் – சங்கீதா விவகாரம் குறித்து பல தகவல் வெளியான போதிலும், இதுவரை விஜய் தரப்பில் இருந்தோ அல்லது விஜய்யின் பெற்றோர் தரப்பில் இருந்தே எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அதே போல் சங்கீதா விஜய்யை விட்டு விலகி இருக்க காரணம், தளபதியின் மகள் திவ்யா சாஷா லண்டலின் படிப்பதால் தன்னுடைய மகளை பார்த்து கொள்ளவே அவர் அங்கிருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விஷயம் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஒரு தகவலை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அண்மையில், யூ டியூப் சேனலில் பேசிய பயில்வான் விஜய் தன்னுடைய அம்மா ஆசை பட்டதாக கட்டியுள்ள சாய் பாபா கோவிலுக்கு நடிகை திரிஷா வந்து சென்றுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ஷோபா அவரை தொடர்பு கொண்டு… நீ ஏன் அங்கு வந்த… உனக்கு அங்க என்ன வேலை என கேட்டு திட்டி தீர்த்து விட்டதாக கூறப்படுவதாகவும், ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என கூறி ட்விஸ்ட் ஒன்றையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!