37 வருடங்களுக்கு முன் கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த விஜயகாந்த்
சினிமாவில் நுழைந்த விஜயகாந்த்தை பலரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாமல் ஏளனம் செய்து ஒதுக்கிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஏமாற்றங்களை ஏணிப்படியாக ஆக்கி சோதனைகளை உடைத்து சாதனையாக்கி சரித்திரம் படைத்த நடிகராக வந்தார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலம் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்து அனைத்து மக்களின் கவனத்தையும் பெற்றார்.
அப்படிப்பட்ட இவருக்கு 37வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து இவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் எனக்கு இந்த பட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. என்னை ஒரு தலை சிறந்த நடிகராக ஏற்றுக் கொண்டதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இது ரசிகர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம் அது மட்டுமே போதும் என்று இவருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எரிந்து இருக்கிறார்.
அதாவது 1986 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த நான் அடிமை இல்லை, விடுதலை, மாவீரன் மற்றும் இதை தொடர்ந்து வரிசையாக நடித்த சில படங்கள் அனைத்தும் தோல்வியை கொடுத்து மிகப்பெரிய சறுக்கை சந்தித்தார்.
அந்த நேரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த எந்த படங்களும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் கொடுக்காத வகையில் தான் இருக்குமாம். மேலும் ஒரு வருடத்தில் நிறைய படங்களில் நடித்ததாகவும், வசூல் மன்னனாகவும் இருந்ததால் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் விஜயகாந்த் இது குறித்து கூறியது, போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த சினிமா உலகில் ஒரு நடிகராக நுழைந்து முன்னேறி நான் சாதித்து இருக்கிறேன் என்றால் அதற்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், என் உயிர் நண்பன் இப்ராஹீமின் ஆலோசனை, மற்றும் கடவுளின் ஆசிர்வாதம் தான் காரணம். அதனால் எனக்கு அதுவே போதும் என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் இதில் வல்லவர்கள் மட்டும் நிலைக்க முடியும் என்கிற நிலைமையை மாற்றி நல்லவர்களும் இருக்க முடியும் என்பதை காட்ட வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். அதை கண்டிப்பாக செய்து காட்டுவேன். என்னுடைய இதயங்கனிந்த ரசிகப் பெருமக்களின் ஆசீர்வாதம் இருக்கும் வரை என்னால் ஜெயிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்