உயிரை குடிக்கும் விஷச்சாராயம் – கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார் விஜய்

விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி வருகிறார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் வயிற்று வலி, கண் வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விஷச்சாராயம் குடித்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையால் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.
(Visited 11 times, 1 visits today)