மனோஜின் உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி…

பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாலை தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவின் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் சூழலில் நடிகர் விஜய்யும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் மனோஜின் உடல் அருகே அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார் அவர்.
அவருக்கு வயது 48 ஆகும். நந்தனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். உயிரிழந்த மனோஜின் உடல் அஞ்சலிக்காக நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
முதலில் சொந்த ஊருக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னைதான் அனைவரும் வருவதற்கு வசதி என்பதால் இங்கேயே அவரது இறுதி சடங்கை முடிக்க குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
மனோஜின் உடலுக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது வீடு நடிகர் விஜய்யின் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால் அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அவர் மனோஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இடிந்துபோய் அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.