பொழுதுபோக்கு

குக் வித் கோமாளிக்கு பதிலாக விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

விஜய் டிவி சக்கைப்போடு போட்டு வந்த ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதில் முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும் டைட்டில் வின்னர்களாக ஆகினர். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே டைட்டிலை வென்றார். இதற்கு அடுத்தபடியாக சுஜிதாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த கையோடு தற்போது மேலும் ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியிலும் குக் வித் கோமாளி நடுவர்களான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான் நடுவர்களாக பங்கேற்க உள்ளார்களாம்.

அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். அவருடன் குக் வித் கோமாளியில் பணியாற்றிய மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகியதால் அவருக்கு பதில் மற்றொரு பெண் தொகுப்பாளரை களமிறக்கி உள்ளனர்.

அதன்படி மணிமேகலைக்கு பதிலாக ஜாக்குலின் இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளாராம். ஜாக்குலின் ஏற்கனவே ரக்‌ஷன் உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி நட்சத்திரங்கள் தான் சமையல் செய்ய உள்ளார்களாம். குக்கிங் வித் விஜய் ஸ்டார் என்கிற பெயரில் இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!