பொழுதுபோக்கு

சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்.. தலனா ஒருத்தர்தான்.. மேடையில் விஜய் வேறலெவல்

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய பிரச்சனைக்கு ஒருவழியாக நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ்: நடிகர் விஜய் மேடை ஏறியதும் ரஞ்சிதமே ஸ்டைல் முத்தங்களை காற்றில் ரசிகர்களுக்கு பறக்கவிட்டார். பின்னர் நான் ரெடி தான் பாடலை பாடி சில ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

வழக்கம் போல என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து ஏகப்பட்ட விஷயங்களை தனது ஸ்டைலில் அடுக்கிப் பேசிய நடிகர் விஜய் முக்கியமான பட்டம் மேட்டரையும் பேசி அசத்தி விட்டார்.

மேலும், சோஷியல் மீடியாவில் சமீப காலமாக தனது ரசிகர்கள் கோபப்படுவதை பார்த்து கண்டித்தும் உள்ளார். நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

See also  கோட் வெற்றிக்கு விஜய்க்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு.. தெறிக்க விட்ட தளபதி

லியோ ஆடியோ லான்ச்சில் மிஸ்ஸான நடிகர் விஜய்யின் பேச்சு லியோ வெற்றிவிழாவில் சிம்ம கர்ஜனையாகவே ஒலித்துள்ளது. அனைத்து விஷயங்களையும் அழகாகவும் தெளிவாகவும் எந்தவொரு சர்ச்சையை கிளப்பாத வகையிலும் பேசிய நடிகர் விஜய் கடைசியில் அந்த பட்டம் தொடர்பான பஞ்சாயத்துக்கும் முடிவு கட்டி உள்ளார்.

https://twitter.com/vijayanna_tn/status/1719760325908807751

மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர்னா ஒருத்தர்தான், தலன்னா ஒருத்தர் தான், நீங்கள் தான் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்.. என்றார்.

https://twitter.com/PeaceBrwVJ/status/1719768194293088730

நடிகர் விஜய்யின் பேச்சு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இணையத்தில் தளபதி விஜய் பேச்சு ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும், நடிகர் விஜய் குட்டி ஸ்டோரியில் அந்த காக்கா, கழுகு கதையும் இழுத்து சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம்” என ஆரம்பித்து விஜய் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

See also  தலைவர் விரைவில் நலம் பெறுவார் - தளபதி அறிக்கை

இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால், நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content