பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி…!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தனது இணையத் தொடரின் புரமோஷனுக்காக பங்கேற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டியுள்ளது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள நடுசென்டர் என்ற இணையத் தொடரின் புரமோஷனுக்காக குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
நரு நாராயணன் இயக்கியுள்ள இந்த இணையத் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
இதனிடையே நடுசென்டர் புரமோஷனுக்காக இதில் நடித்த சூர்யா சேதுபதி, முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆஷா சரத் உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், அவரின் மகன் அதே நிகழ்ச்சியில் புரமோஷனுக்காக பங்கேற்றுள்ள நிலையில், இருவரும் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்த்து இருக்கின்றீர்களா?





