வேலுடன் போஸ் கொடுத்த விஜய் சேதுபதி
தைபூசத் திருநாளை முன்னிட்டு, நடிகர் விஜய்சேதுபதி, கையில் பெரிய வேலுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அனைவருக்கும் இனிய தைப்பூச தின நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய்சேதுபதியின் போட்டோவை பார்த்த இரசிகர்கள் அனைவரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் வெற்றி வேல் வீரவேல் என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
விஜய்சேதுபதி நடித்த காந்தி டாக்ஸ் மௌன திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ‘ஸ்லம் டாக்’ படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இந்த படத்தில், சமயுக்தா, தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.





