பொங்கல் ரேஸில் குதித்த பெரிய தலைகளின் படங்கள்…. விஜய்யுடன் நேரடியாக மோதும் பிரபாஸ்
இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக தி ராஜா சாப் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில ஊடகங்கள் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி ராஜா சாப் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிடப்படும் என்று தெளிவுபடுத்தியது.
மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும், “தி ராஜா சாப்” திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘தி ராஜா சாப்’ படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
விஜய்யின் ஜனநாயகன்
என்னதான் பிரபாஸூக்கு ரசிகர்கள் இருந்தாலும் கோலிவூட்டில் கிங் விஜய் தான். இப்போது விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். இதனால் தனது கடைசி படத்தையும் அறிவித்து விட்டார்.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இறுதி படம் தான் “ஜனநாயகன்”. இப்படம் 2026 ஜனவரி மாதம் 9ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி ரேஸில் பல படங்கள் மோத தயாராக உள்ளன.
அதாவது, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஜனவரி 14ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படமும் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தீபாவளிக்குத்தான் பெரிய தலைகளின் படங்கள் இல்லை என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு பொங்கல் நல்ல விருந்தை வைக்க காத்திருக்கின்றது.
ஆக பிரபாஸ், விஜய், சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவின் படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளதால் எதிர்பார்ப்பை எகிறவைத்து வைட்டது.






