பொழுதுபோக்கு

“தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிடுங்க” விஜய் கட்சிக்கு ஓபன் சவால்

விஜய் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கிய நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் தனித்து போட்டியிட போவதாக கூறியிருந்தார். மேலும் அரசியல் சம்பந்தமான மாநாடுகளையும் செய்து வருகிறார்.

மே 30ஆம் தேதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க இருக்கிறார். இந்த சூழலில் அவரது கொள்கையில் இருந்து மாறியபடி சில விஷயங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருபவர் ராஜ்மோகன். இவர் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து கூறி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதாவது திமுக மற்றும் பாஜகவை தவிர்த்து எந்த கட்சி வந்தாலும் கூட்டணி அமைக்க தயார். பாசிசத்தோடும், பாயாசத்தோடும் எங்களுக்கு கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருப்பதாக ராஜ்மோகன் கூறியிருக்கிறார்.

இதை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டு இருக்கிறார். அதாவது தவெக கட்சியிலிருந்து ஏதாவது தெளிவான அறிக்கை வரும் என்று பார்த்தால் அது நடந்த பாடு இல்லை. மேலும் எதிரி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. மேலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது.

பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை வைத்து உள்ள நீங்கள் எப்படி பாமகவுடன் கூட்டணி அமைக்க இயலும். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனியாக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. பல இஸ்லாமிய கட்சி அமைப்புகள் உங்களுடன் சேரவில்லை.

பின்பு யாருடன் தான் கூட்டணி வைக்க போகிறீர்கள். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிடுங்கள் அல்லது உங்கள் தீம் பார்ட்னர்களான அதிமுக, பாஜக அணியில் சேருங்கள். இல்லையென்றால் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ், பவன் கல்யாண் ஐனசேனா உடன் பந்திய கூட்டணி அமையுங்கள். ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்கும் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!