பொழுதுபோக்கு

தளபதி – 69 குறித்து புதிய செய்தி… அட ஹீரோயின் இவங்களா?

கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இதற்கு முன்னர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய அவர், முதன்முறையாக விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அதன்படி தளபதி 69 திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் விஜய்யின் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்த அனிருத், தற்போது அவருடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார்.

அதுமட்டுமின்றி தளபதி 69 படத்தின் ஹீரோயின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 69 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் கத்தி, மெர்சல், தெறி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுவதால், தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content