பொழுதுபோக்கு

OTT-யில் நம்பர் 1-ல் இருக்கும் விஜய்யின் GOAT படம்..

தியேட்டரில் தெறிக்கவிட்டதோடு நிற்காமல் தற்போது தளபதியின் படம், OTT-யிலும் மாஸ் காட்டி வருகிறது.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி, ஓடிடியிலும் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி மற்றும் பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் காந்தி என்ற லீட் ரோலில் நடிகர் விஜய் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவும் நானே, எனக்கு வில்லனும் நானே என்று மிரட்டி எடுத்திருப்பார். திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட “கோட்” திரைப்படம் சில நாட்களுக்கு முன் Netflix ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான ஒரு சில நாட்களிலேயே டாப் ட்ரெண்டிங் படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த படம் IMDB ரேட்டிங்கில் 10க்கு 6.3 புள்ளிகளை பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் உலகெங்கிலும் ரூ. 126 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் ரூ. 295 கோடியும் அதே சமயம் உலகளவில் ரூ. 451 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது OTT-யிலும் நம்பர் ஒன்னாக இந்த படம் உள்ளது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!