பொழுதுபோக்கு

விஜயகாந்த் நலம்பெற விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர்.

திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

இதேபோல் நாகையில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

இந்நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருள்மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகர், பூமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்